மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

பாடகர் உதித் நாராயணன் மகன் கைது!

பாடகர் உதித் நாராயணன் மகன் கைது!

பிரபல பாடகர் உதித் நாராயணனின் மகன் ஆதித்ய நாராயணன், கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகரான உதித் நாராயணன், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மகனான ஆதித்ய நாராயணனும் பாடகராவார். ஆதித்ய நாராயணன், மும்பை லோகந்த்வாலா பேக் ரோடு பகுதியில் தனது மெர்சிடஸ் காரை ஓட்டிச் சென்றபோது ஒரு ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும், பெண் பயணி ஒருவரும் படுகாயமடைந்தனர். இதனால் அந்தப் பெண்ணின் கால் எலும்பு முறிந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, ஆதித்ய நாராயணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி என்டிடிவியில் வெளிவந்த செய்திக்குறிப்பில், “ஆதித்ய நாராயண் காரில் வேகமாகச் சென்றதோடு மட்டுமில்லாமல் தவறான இடத்தில் யு-டர்ன் போட்டுள்ளார். அதனால் நிலை தடுமாறி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். அதன் பின் காயமடைந்த பெண்ணை உதித் நாராயண் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்” எனப் போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

10,000 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர், ஆதித்ய நாராயணை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon