மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

துல்கரை தேர்ந்தெடுத்த சோனம்!

துல்கரை தேர்ந்தெடுத்த சோனம்!

கடந்த வருடம் நடிகை சோனம் கபூர் இரண்டு புத்தகங்களை, திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் முதல் கட்டமாக அந்த புத்தகங்களின் திரைப்படமாக்கும் உரிமையை வாங்கினார். The Zoya Factor மற்றும் Battle for Bittora ஆகிய இரண்டும் தான் அந்த புத்தகங்கள். தனது முயற்சியைப் பற்றி சோனம் அறிவித்ததிலிருந்தே, இந்தக் கதைகள் எப்போது படமாக்கப்படும் என்று ரசிகர்கள் காத்திருந்ததற்கு விடையாக, இப்போது துல்கர் சல்மானுடன் இந்தப் படங்களை அறிவித்திருக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்துவரும் துல்கர் சல்மானுக்கு ‘The Zoya Factor’ இரண்டாவது இந்தித் திரைப்படம். ஆகாஷ் குராணா இயக்கத்தில் துல்கர் நடித்த கர்வான் திரைப்படம் விரைவில் வெளியாகும். அந்தத் திரைப்படம் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்தை துல்கர் ஓகே செய்திருக்கிறார்.

அனுஜா சௌஹான் எழுதிய The Zoya Factor கதையில் துல்கர் சல்மான் ஏற்று நடிப்பது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கதாபாத்திரத்தில். துல்கருக்கு ஜோடியாக சோனம் கபூர் விளம்பர ஏஜெண்ட் கேரக்டரில் நடிக்கிறார்.

இந்திய நாட்டில் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் ஏகோபித்த ஆதரவைக் கண்டு, அதற்குள் ஒரு புனைவையும், ரசிகர்கள் விரும்பும் சகல கமெர்ஷியல்களையும் கலந்து அனுஜா சௌஹான் எழுதிய கதை தான் The Zoya Factor. ஒரு விளம்பரத்துக்காக இந்திய அணியுடன் பயணப்படும் ஜோயா, அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுகிறது. அடுத்தநாள் ஜோயா அவர்களுடன் மதிய உணவு சாப்பிடாதபோது தோற்றுப்போகிறார்கள். எனவே, ஜோயாவை இந்திய அணியின் அதிர்ஷ்டம் என்று கூறி இந்த நாடே கடவுளாக பார்க்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஜோயாவை அழைத்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு இந்திய அணியுடன் சென்றுவர வற்புறுத்துகிறது. கிரிக்கெட் அணியினர், ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என அனைவரும் ஜோயாவை உலகக் கோப்பை போட்டிக்குச் செல்ல வற்புறுத்தும்போது, அணியின் கேப்டன் மட்டும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். ஜோயா இப்படியொரு நிலைக்கு வர காரணம் என்ன, அவரது விளம்பரத் தொழில் என்ன ஆனது என்பதெல்லாம் சுவாரஸ்யமான கதை.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon