மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அமெரிக்காவிலிருந்து கரிம ஆப்பிள் இறக்குமதி!

அமெரிக்காவிலிருந்து கரிம ஆப்பிள் இறக்குமதி!

இந்தியாவின் ஐஜி இண்டெர்நேஷனல் நிறுவனம் ஸ்டெம்லிட் குரோவர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து கரிம ஆப்பிள்களை இறக்குமதி செய்யவுள்ளது.

ஐஜி இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் தருண் அரோரா, இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், “இத்தகைய கரிம ஆப்பிள்களை இறக்குமதி செய்வதன் மூலம் பழங்களை உண்பதற்கான முக்கியத்துவத்தை நம்மால் வலியுறுத்த முடியும். பொதுவாகப் பழ விரும்பிகள் கரிம ஆப்பிள்களை விரும்புவர். ஸ்டெம்லிட் நிறுவனத்துடன் நாங்கள் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் பெரிய வெற்றியைத் தருவதோடு பலதரப்பட்ட பழங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய உதவும். நாங்கள் இத்தகைய நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுவதற்காகப் பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஸ்டெம்லிட் குரோவர்ஸ் நிறுவனத்தின் மூத்த ஏற்றுமதிக் கணக்கு மேலாளர் வில்லியம் யங் பேசுகையில், “கரிம ஆப்பிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்குப் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் மிகுதியான கரிம பொருட்கள் விரும்பப்படுகின்றன. இந்திய மக்களின் தேவையை நாங்கள் பூர்த்தி செய்வோம். ஐஜி இண்டெர்நேஷனல் நிறுவனத்தோடு செய்துள்ள ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் எங்களுடைய பொருட்கள் அனைவரையும் எளிதாகச் சென்றடையும்” என்றார்.

இந்தியாவில் கரிம பொருட்களுக்கான நுகர்வில் கரிம பழங்களின் நுகர்வு 52 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon