மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

தினம் ஒரு சிந்தனை: வளர்ச்சி!

தினம் ஒரு சிந்தனை: வளர்ச்சி!

நீங்கள் ஏற்கெனவே சாதித்த விஷயங்களைத் தாண்டி, வேறு எதையாவது செய்ய முயற்சிக்காதவரை உங்களால் ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது.

- ரால்ப் வால்டோ எமேர்சன் (மே 25, 1803 – ஏப்ரல் 27, 1882). அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுரையாளர், கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர். தனது சிந்தனைகளைக் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர். 1836இல் ‘இயற்கை’ (Nature) என்ற தலைப்பில் இவர் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் இவர் ‘கடப்புவாதம்’ (Transcendentalism) என்ற தமது மெய்யியல் கொள்கையை முன்வைத்தார். இவர் விளக்கும் சில மெய்யியல் கருத்துகளுள் ‘தனித்துவம்’, ‘சுதந்திரம்’, ‘மனிதர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்’, ‘ஆன்மாவும் சூழல் உலகும் உறவு கொண்டவை’, ‘பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு’ போன்றவை அடங்கும். எமேர்சனின் படைப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கிய, மத மற்றும் சிந்தனை ஆகியவற்றில் முக்கிய ஆவணங்களாகக் கருதப்படுகிறது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon