மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ரன்வீருக்கு ஜோடியாகும் ப்ரியா?

ரன்வீருக்கு ஜோடியாகும் ப்ரியா?

ப்ரியா வாரியர் அறிமுகமாகும் ‘ஒரு அதாரு லவ்’ திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் பாலிவுட்டில் அவர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் காவல் துறை அதிகாரியாக நடிக்கும் படம் சிம்மா. தர்மா புரொடக்ஷன் சார்பாக கரண் ஜோகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் ப்ரியா வாரியர் ரன்வீருக்கு ஜோடியாக நடிப்பதாகப் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். “படத்தில் ப்ரியாவின் கதாபாத்திரம் அத்தனை பெரிதல்ல. கண் அசைவால் ஒரே நாளில் பிரபலமான அவரை பாலிவுட்டே விரும்புகிறது. இணையத்தில் உருவாகியுள்ள அவரது பிரபலத்தைத் திரையுலகுக்குக் கொண்டுவருவதை கரண் ஜோகரைவிட யார் சிறப்பாகச் செய்ய முடியும்?” என்று கூறியுள்ளனர்.

ரோகித் ஷெட்டி தனது படங்களுக்குத் தென்னிந்திய நடிகைகளைக் கதாநாயகியாக்க விருப்பம் உள்ளவராக இருக்கிறார். சிங்கம் படத்துக்கு காஜல் அகர்வாலைக் கதாநாயகியாக்கினார். சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்துக்கு அவரது முதல் விருப்பமாக இருந்தது அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon