மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

தமிழகத்தில் வோடஃபோன் வோல்ட் சேவை!

தமிழகத்தில் வோடஃபோன் வோல்ட் சேவை!

இந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் வோல்ட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வோடஃபோன் நிறுவனத்தின் தமிழகத் தொழில் பிரிவுத் தலைவரான எஸ்.முரளியிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், ‘இந்த ஆண்டில் வோல்ட் சேவை தமிழகத்தில் தொடங்கப்படுமா?’ என்று கேட்டதற்கு, “இந்த ஆண்டில் வோல்ட் சேவையை இங்கு தொடங்கிவிடுவோம். இச்சேவையைத் தொடங்கியவுடன் உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்றார். தற்போதைய நிலையில், கர்நாடகா, மும்பை, டெல்லி, குஜராத் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வோடஃபோன் நிறுவனம் வோல்ட் சேவைகளை வழங்கி வருகிறது. வோல்ட் சேவையின் வாயிலாக டேட்டா சேவைக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போல, சிறந்த அழைப்புச் சேவையை வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம்.

நடப்பு நிதியாண்டில் தனது சேவையைத் தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் விரிவுபடுத்துவதற்காக ரூ.600 கோடியை வோடஃபோன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் இங்கு சுமார் 21.8 சதவிகித சந்தைப் பங்கைக்கொண்டு, 1.6 கோடி வாடிக்கையாளர்களைத் தனது சேவையில் இணைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிவேக 4ஜி டேட்டா சேவையைச் சுமார் 1,800 நகரங்களில் தற்போது வழங்கி வருவதாகவும் வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon