மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அப்பா- மகனுக்குப் பதவி!

அப்பா- மகனுக்குப் பதவி!

காங்கிரஸ் கட்சியில் ஒரே குடும்பத்தில் இருவருக்குப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதால் கட்சி நிர்வாகிகள் கொதித்துபோய் உள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூன்று நாள் மாநாடு மார்ச் 16, 17, 18 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில் அதிகாரம் படைத்த பதவியான (AICC) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கான 122 பெயர்கள் அடங்கிய பட்டியல் சில நாட்கள் முன் வெளியானது.

பட்டியலில் திருநாவுக்கரசு மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன், ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளோங்கோவன் அவரது மகன் திருமகன், நா.செ.ராமச்சந்திரன் அவரது மகன் ராஜேஷ், ஆருண் மற்றும் அவரது மகன் ஹசன், அன்பரசு அவரது மகனுக்கும், சுதர்சன நாச்சியப்பனுக்கும் அவரது குடும்பத்தார் ஒருவருக்கும் எனக் கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் தங்களும் தங்கள் மகனுக்கும், குடும்பத்தினருக்கும் பெற்றிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்காகவே இருபது முப்பது ஆண்டுகள் செலவழித்து, போராட்டங்கள் நடத்தி,கட்சியை ஓரளவுக்கு உயிரோட்டமாக தமிழகத்தில் வைத்திருக்கும் பலருக்கு இந்தப் பட்டியலில் இடமில்லை என்றும் புலம்பல் அதிகமாக இருக்கிறது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon