மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

பியூட்டி ப்ரியா: ஆண்களுக்கான ஃபேஷியல்கள்!

பியூட்டி ப்ரியா: ஆண்களுக்கான ஃபேஷியல்கள்!

இந்த மாதம் முழுவதுமே இன்று வரையிலும்கூட மகளிர் தினத்தைப் பற்றிப் பேசிக்கொண்டும் மகிழ்ந்தும் இருக்கிறோம். பலர் ஒரு நாள் மட்டுமா மகளிர் தினம், ஒவ்வொரு நாளுமே மகளிர் தினம்தான் என்று சிலர் குதூகலமாவதும் காண முடிகிறது. அப்படி இருக்க, ஆண்கள் பக்கமும் கொஞ்சம் திரும்பி மாஸ்க், ஃபேஷியல் பற்றி சொல்லலாமே, என ஒரு தோழி கேட்கிறாள். காதலனுக்கா என்று கேட்டால் புன்னகையத் தவிர பதிலேது இல்லை. சரி சரி... எதுவாகினும் நலமாகுக... நாம் நம் கடமையைச் செய்வோம். இதோ ஆண்களுக்கான ஃபேஷியல்கள்

வெள்ளரிக்காய் மாஸ்க்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.

இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்துக்குத் தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது.

வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடங்கள் ஊறவைத்து முகத்தைக் குளித்த நீரில் கழுவ வேண்டும்.

வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயைத் தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

வேப்பிலை மாஸ்க்

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்துக்கு ஏற்ற மருந்துப் பொருளாகும்.

இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையைப் பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்தக் கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத மாஸ்க் இது. வாரத்துக்கு இரண்டு முறை உபயோகிக்கலாம்.

தேன், முட்டை

தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது.

ஒரு டீஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் தடவலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்தக் கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதைப் பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.

தக்காளிப்பழ மாஸ்க்

ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்குத் தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது.

இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon