மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ஈரோடு: மஞ்சள் விலை உயர்வு!

ஈரோடு: மஞ்சள் விலை உயர்வு!

ஈரோட்டில் மஞ்சள் வரத்து அதிகரித்ததால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணசாமி எனும் வியாபாரி பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “சென்ற திங்கட்கிழமை (மார்ச் 11) ஏற்கெனவே சந்தைக்கு வந்திருந்த 4,500 மூட்டைகளோடு புதிதாக மேலும் 3,200 மூட்டைகள் அளவிலான மஞ்சள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் 80 சதவிகித புது மற்றும் கலப்பின மஞ்சள் விற்பனை செய்யப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை குழுவில் விற்பனைக்கு வந்திருந்த 302 மூட்டைகளில் தரத்தின் காரணமாக 35 சதவிகிதமே விற்பனையானது” விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 வரையிலும், வேர் மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 வரையிலும் அதிகரித்துள்ளது.

ஈரோடு மஞ்சள் வணிகர் கூட்டமைப்பு சந்தைக் கூடத்தில், விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,569 முதல் ரூ.8,789 வரையிலும், வேர் மஞ்சள் ரூ. 5,089 முதல் ரூ.7,259 வரையிலும், உள்நாட்டு விரலி மஞ்சள் ரூ.5,400 முதல் ரூ.7,718 வரையிலும், வேர் மஞ்சள் ரூ.5,129 முதல் ரூ. 6,899 வரையிலும் விற்பனையானது. விற்பனைக்காக வந்த 3,023 மூட்டைகளில் புது ரகம், கலப்பு ரகம் சேர்த்து மொத்தம் 1,581 மூட்டைகள் மட்டுமே விற்பனையாயின. ஒழுங்குமுறை விற்பனை குழு சார்பாக நடத்தப்பட்ட ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,399 முதல் ரூ.7,561 வரையிலும், வேர் மஞ்சள் ரூ.5,889 முதல் ரூ.7,099 வரையிலும் விற்கப்பட்டது. விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட 302 மூட்டைகளில் மொத்தம் 112 மூட்டைகள் விற்பனையானது.

ஈரோடு கூட்டுறவுச் சந்தையில் புதிய விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,489 முதல் ரூ.8,850 வரையிலும், வேர் மஞ்சள் ரூ.6,088 முதல் ரூ.7,222 வரையிலும், பழைய மஞ்சள் ரூ.6,456 முதல் ரூ.8050 வரையிலும், வேர் மஞ்சள் ரூ.5,780 முதல் ரூ.6,885 வரையிலும் விற்கப்பட்டது. ஆக மொத்தம் ஈரோடு கூட்டுறவுச் சந்தைக் குழு ஏலத்தில் 1,060 மூட்டைகள் விற்பனையானது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon