மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

பெனால்ட்டி வரை செல்லுமா?

பெனால்ட்டி வரை செல்லுமா?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை கோவா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி இன்று (மார்ச் 13) நடைபெறவுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நான்காவது சீசன் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், லீக் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. மொத்தம் இரண்டு லெக் போட்டிகளாக நடத்தப்படும் அரையிறுதி ஆட்டங்களில் சென்னை மற்றும் கோவா அணிகள் மோதிய முதல் லெக் அரையிறுதி கடந்த சனிக்கிழமை (மார்ச் 10) நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது லெக் போட்டியில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இவ்விரு அணிகளும் சமபலம் கொண்டு விளையாடும் பட்சத்தில் இந்த போட்டி பெனால்ட்டி வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

நேற்று முன்தினம் (மார்ச் 11) நடைபெற்ற ஒரு அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது