மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

விருது வழங்கி வாழ்த்திய ரஜினிகாந்த்

விருது வழங்கி வாழ்த்திய ரஜினிகாந்த்

உலக மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த்தும் அவரது வீட்டில் கராத்தேவில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடினார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நேற்று உலக மகளிர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். அவர் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் கராத்தேவில் சாதனைப் படைத்த வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி உள்ளார்.

ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கராத்தே நிர்வாகத் தலைவர் தியாகராஜன் பொதுச்செயலாளர் பரத் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இந்திய கராத்தே வீராங்கனை சந்தியா ஷெட்டி உட்பட பல்வேறு வீராங்கனைகளுக்கு ரஜினிகாந்த் விருதுகளை வழங்கினார்.

விருதுகள் பெற்றுக்கொண்ட பின்னர் வீராங்கனைகள் ரஜினிகாந்த் முன்னர் கராத்தே செய்கைகளை அவர் முன் செய்து காண்பித்தனர். இந்த விருது வழங்கும் விழா முழுவதும் வீடியோ பதிவாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon