மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

11 நகரங்களில் சார்ஜிங் மையங்கள்!

11 நகரங்களில் சார்ஜிங் மையங்கள்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக மத்திய அரசு 11 நகரங்களைத் தேர்வு செய்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து கார்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் பரபரப்பான நகரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தலா ரூ.105 கோடி செலவில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. மக்களின் போக்குவரத்துச் சேவைக்குப் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் பேருந்துகள், எலெக்ட்ரிக் டாக்ஸிகள் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை சார்ஜிங் செய்வதற்கு இம்மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சுமார் 44 நகரங்கள் ஒப்புதல் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தன. அதில், டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், இந்தூர், கொல்கத்தா, ஜம்மு மற்றும் கவுகாத்தி ஆகிய 11 நகரங்களும் முதற்கட்டமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சரான மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் போக்குவரத்துச் சேவைக்காக மொத்தம் 3,144 எலெக்ட்ரிக் பேருந்துகளும், 2,430 டாக்ஸிகளும், 21,545 ஆட்டோக்களும் இயக்கப்படவுள்ளன.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon