மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

இந்தியாவின் சொத்துமிக்க பெண்மணிகள்!

இந்தியாவின் சொத்துமிக்க பெண்மணிகள்!

ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சொத்துமிக்கவர்களின் பட்டியலில் இந்த வருடம் 8 இந்தியப் பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.

சாவித்திரி ஜிண்டால்: இவரது சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலராகும். இவர் ஜிண்டால் குழுமத்தின் தலைவி ஆவார். இந்நிறுவனம் ஒ.பி. ஜிண்டால் மறைவுக்குப் பின் நான்கு மகன்களால் வகுக்கப்பட்டாலும், 2005ஆம் ஆண்டிலிருந்து இவர் ஒருவரே இக்குழுமத்தின் தலைவராக உள்ளார். இவரது தலைமையின் கீழ் சுரங்கத் துறை முதல் எண்ணெய் துறை வரையிலான வருவாய் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கிரன் மஜூம்தார் ஷா: இவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியின் டாலராகும். ஷா, பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். அவரின் தந்தை போலவே அவரும் மதுபானத் துறையில் ஆதிக்கம் செலுத்த விரும்பினார். ஆனால் 1979ஆம் ஆண்டில் பயோகான் எனும் மருந்து நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. வங்கிகள் கடன் தர மறுத்துவிட்டன. இருப்பினும் நிறுவனம் வளர்ச்சிபெற அதற்கான தடைகளைத் தகர்த்தெறிந்தார். 2005ஆம் ஆண்டில் உலகின் 85வது சக்தி வாய்ந்த பெண்ணாக ஷா அறிவிக்கப்பட்டார்.

ஸ்மிதா கிரிஸ்னா கோத்ரேஜ்: இவரது சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலராகும். இவர் கோத்ரெஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார்.

லீனா திவாரி: இவரது சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலராகும். தனது தந்தை வித்தால் காந்தியின் ரேவ்லான் நிறுவனத்தை தொடர்ந்து யு.எஸ்.வியின் தலைமை நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இந்தியாவில் நீரிழிவு மற்றும் இதய நோயின் மீதும் கவனம் செலுத்துவதில் யு.எஸ்.வி. ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

விநோத் ராய் குப்தா: இவரின் சொத்து மதிப்பு 2.1 பில்லியன் டாலர் ஆகும். இவருக்குச் சொந்தமான ஹேவல்ஸ் 1958ஆம் ஆண்டு இவரின் கணவரால் மின் வர்த்தக நிறுவனமாக நிறுவப்பட்டது. இந்நிறுவனம் மின்சார மற்றும் லைட்டிங் சாதனங்கள், குளிர்பதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்குப் பொருத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் தயாரிக்கிறது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon