மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

தினம் ஒரு சிந்தனை: தோல்வி!

தினம் ஒரு சிந்தனை: தோல்வி!

நம் சிந்தனைகளையும் இலக்குகளையும் கோட்பாடுகளையும் மறக்கும்போது மட்டுமே தோல்வி வருகிறது.

- ஜவகர்லால் நேரு (14 நவம்பர் 1889 – 27 மே 1964). சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரர். ‘நவீன இந்தியாவின் சிற்பி’ எனக் கருதப்படுபவர். இவரது படைப்புகளான உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை, இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகியவை இவருக்குப் பெருமை சேர்த்தன. இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். எனவே அதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த நாளான, நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon