மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

ஸ்பெயினில் பெண்கள் வேலைநிறுத்த போராட்டம்!

ஸ்பெயினில் பெண்கள் வேலைநிறுத்த போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தன்று ஸ்பெயின் நாட்டு பெண் தொழிலாளர்கள் பாலின சமத்துவமின்மை மற்றும் பாலியல் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்து முதன் முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மகளிர் தினம் நிகழ்வுகள் ஏராளமாக நடந்தன. ஆனால். ஸ்பெயின் நாட்டில், நூற்றுக்கணக்கான பெண்கள் "if we stop, the world stops" என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,10 தொழிற்சங்கங்களும் ஸ்பெயினின் சில சிறந்த பெண் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். இந்த போராட்ட ஒருங்கிணைப்பாளர், பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதோடு,வீட்டிலும் எந்த வேலையும் செய்யக் கூடாது என வலியுறுத்தினர்.

இதன் காரணமாக நேற்று(மார்ச் 8)300 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது. நெட்வொர்க் சேவையும் பாதிக்கப்பட்டது.

பாலியல் ஒடுக்குமுறை, சுரண்டல் மற்றும் வன்முறை இல்லாத ஒரு சமூகம் வேண்டும். " மோசமான வேலை நிலைமைகளை ஏற்றுக்கொள்ளவும், ஆண்களை விட குறைவான ஊதியம் பெறுவதையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரும்பாலான வேலைகள் பாதிக்கப்படும் . இதுகுறித்து தினசரி பத்திரிகை 1,500 பேரிடம் நடத்திய கருத்துகணிப்பில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு 82% ஆதரவு அளித்தனர். ஸ்பெயினில் 76% பெண்கள் ஆண்களைவிட கடினமாக வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஏனெனில், பெண்கள் இல்லாத சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு கஷ்டமானது என்பதை புரிய வைக்க வேண்டும் என பெண்ணிய குழுக்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஸ்பெயினில் ஒற்றை பாலினம் போராட்டம் செய்யவோ, அதை ஆண்கள் ஆதரிக்கவோ அனுமதி இல்லை.

இதற்கு எதிர்ப்புகளும் வந்தன. ஆளும் கட்சியான பார்ட்டிடோ பாப்புலர், இந்த நடவடிக்கை உயர்ந்த பெண்ணிய குழுக்காக அல்லாமல்,அன்றாட வாழ்வு பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களுக்காக என கூறுகின்றது. இருப்பினும், இந்த போராட்டத்தை சிலர் ஆதரிக்கின்றனர்.

ஸ்பெயினில், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் ஆண்களை விட 13 முதல் 19 சதவிகிதம் வரை குறைவாக சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon