மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

திரைக்கு வரும் ரியல் ஜோடி!

திரைக்கு வரும் ரியல் ஜோடி!

நாக சைதன்யா, சமந்தா ஜோடி திருமணத்துக்குப் பின் மீண்டும் திரையுலகில் இணைந்து களமிறங்கவுள்ளது.

திருமணத்துக்குப் பின் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் சமந்தா தற்போது தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தத் தகவலை நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மூன்று படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

நின்னு கோரி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா நிர்வனா. காதலை மையமாக வைத்து அவர் இயக்கிய அந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. பெயரிடப்படாத இந்தப் படத்தை அவர் இயக்கவுள்ள நிலையில் இதையும் மனதை ஈர்க்கக்கூடிய காதல் திரைப்படமாக உருவாக்கவுள்ளார்.

நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பட அறிவிப்பு போஸ்டரைப் பதிவேற்றி இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஷகு கரபடி, ஹரிஷ் பெட்டி இணைந்து ஷைன் ஸ்க்ரீன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர். மே மாதத்துக்குப் பின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon