மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

ஹெல்த் ஹேமா: நெஞ்சு சளியை நீக்க எளிய குறிப்புகள்!

ஹெல்த் ஹேமா: நெஞ்சு சளியை நீக்க எளிய  குறிப்புகள்!

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்தே வந்து விடும்.

தேங்காய் எண்ணையை சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விடக்கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணப்படுத்தி விடலாம்.

நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்து நீக்கினால் மிகச் சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது

ஆடாதோடை செடியின் வேரை இடித்து சலித்து சிறிது தேன் விட்டு சாப்பிட்டு வர நெஞ்சு சளி கரையும். ( இரண்டுமே நாட்டு மருந்து கிடைகளில் கிடைக்கும்)

சிறிது எலுமிச்சை சாறை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கிக் குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும்.

வைட்டமின் சி நெஞ்சு சளியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. நெஞ்சு சளி இருக்கும் நேரத்தில் இந்த ஆரஞ்சு பழத்தையும், எலுமிச்சை பழத்தையும் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நெஞ்சு சளி கரையும்.

குடிக்க முடிந்த காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத் தூளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமப்பட்டால், சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட, சிரமம் குறையும்

அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால்,கபம் போகும்

தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும். மிளகுத் தூளையும், மஞ்சளையும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon