மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

பியூட்டி ப்ரியா: உருளையைப் பயன்படுத்தி நரையைப் போக்கலாம்!

பியூட்டி  ப்ரியா:  உருளையைப் பயன்படுத்தி  நரையைப் போக்கலாம்!

உருளைக்கிழங்கு நீரைப் பயன்படுத்தி நரை முடியைப் போக்குவது எப்படி என இன்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

முதலில் 5 - 6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, தோலை நீக்கி, அந்தத் தோலைத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் உருளைக்கிழங்கு தோலை 2 கப் நீரில் போட்டு, 15 - 20 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

பின்பு அந்தக் கலவையை குளிரவைத்து, நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

தலைக்கு ஷாம்பு போட்டு அலசி, கண்டிஷனர் போட்டு 1 - 2 நிமிடங்கள் கழித்து நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

பிறகு உருளைக்கிழங்கு நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக அந்த நீரைக் கொண்டு மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசக் கூடாது.

பிறகு தலைமுடியை நன்கு உலர்த்தி, சீப்பு கொண்டு தலைமுடியைச் சீவ வேண்டும்.

குறிப்பு: நீங்கள் தயாரித்துள்ள உருளைக்கிழங்கு நீரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கக் கூடாது.

இந்த சிகிச்சையை வாரத்துக்கு மூன்று முறை செய்ய வேண்டும்.

இப்படிச் செய்து வந்தால், இரண்டு வாரங்களில் நரைமுடிகளில் நல்ல மாற்றம் வருவதைக் காணலாம்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon