மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 13 நவ 2019

கருணை இல்லத்தை மூட இடைக்காலத் தடை!

கருணை இல்லத்தை மூட இடைக்காலத் தடை!

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் பகுதியில் செயல்பட்டுவரும் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்களைக் கட்டாயப்படுத்தி அடைத்துவைத்து அவர்களது உடல் உறுப்புகள், எலும்புகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, முதியோர் இல்லத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட முதியோர்களை அங்கிருந்து அரசு காப்பகத்துக்கு மாற்றினர். அனுமதியின்றி செயல்பட்டுவரும் இல்லத்தை என் மூடக் கூடாது என மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.

வருவாய் கோட்டாட்சியர் நோட்டீசை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணை இல்லத்தினர் வழக்கு தொடர்ந்தனர் . மேலும், கருணை இல்லம் முறையான அனுமதியுடனும், இறப்புகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுவருவதாகவும் புனித ஜோசப் இல்லம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 8) நீதிபதி ரமேஷ் முன்பு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தமிழக அரசின் உரிய அனுமதி பெற்றே கருணை இல்லம் நடத்திவருவதாக வாதிடப்பட்டது.

தமிழக அரசின் அனுமதி பெற்று இயங்கிவரும் இல்லத்தை ஏன் மூட வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். கருணை இல்லத்தை மூட இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்டதால், மார்ச் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் .

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon