மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

அண்ணே நீங்க அட்மினா, இடியமினா? -அப்டேட் குமாரு

 அண்ணே நீங்க அட்மினா, இடியமினா? -அப்டேட் குமாரு

இன்ஸ்பெக்டர் துரத்த சொன்னாராம். இந்த டிரைவர் தான் கிட்டத்துல ஓட்டிக்கிட்டு போய் எட்டி உதைக்க வெச்சிருக்கார். அவருக்கு என் கண்டனங்கள்னு எடப்பாடி சொல்லிடுவாரோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். நல்லவேளையா சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஆனால், சஸ்பெண்ட் பன்றதைவிட ஒரு சந்தோஷமான விஷயம் இருக்கவே முடியாது. சஸ்பெண்ட்ல இருக்கும்போது பாதி சம்பளம் குடுப்பாங்க. அப்பாலைக்கா விசாரணை நடக்கும். அந்த விசாரணை முடிஞ்சு சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் பண்ணதும், அந்த சமயத்துல புடிச்சு வெச்ச சம்பளத்தையும் திருப்பி கொடுத்துடுவாங்க. இந்த டைம்ல அந்த போலீஸும் வீட்ல நல்லா ரெஸ்ட் எடுப்பார். 10 நாள் போச்சுன்னா மக்களும் இதை மறந்துடுவாங்க. அடடா, தண்டனைன்னா இப்படித்தான் இருக்கணும். அப்டேட்டைப் படிங்க நான் போய் என் அட்மின் என்ன பண்றான்னு பாத்துட்டு வர்றேன். வர வர இந்த அட்மினுங்க தான் ரொம்ப பேசுறாங்க. பெரியார் சிலை உடைச்ச மேட்டர்ல, உடைச்சவருக்கு கண்டனம்னு ஒரு போஸ்ட் தான் போடச்சொன்னேன். இந்த அட்மின் பய என்னடான்னா பெரியார்னா யாருன்னு தெரியுமா? தைரியம் இருந்தா என் எதிர்ல வந்து பாருடான்னு அவன் இஷ்டத்துக்கும் எதையாச்சும் டைப் பண்ணி வெச்சிட்றான். கீழ, யுவர்ஸ் ஒபீடியண்ட்லி பகுதில மட்டும் என் பேரை போட்டுட்றான். உஸ்ஸ்ஸ்ஸ்... இவன் அட்மினா இல்லை இடியமினான்னே தெர்ல.

ஆல்தோட்டபூபதி

இந்த '10 லட்சம் நிதியுதவி, 1000 பிரியாணி பொட்டலம் தந்தார்' ரக மேட்டர்கள்ல, ராகவா லாரன்ஸ் டிஸ்சார்ஜ் பண்ணிட்டு கனடா பிரதமர அட்மிட் பண்ணலாம் போல

Kala

பெண்களின் உணர்வுகள் மதிக்கப்படும் இடத்தில் எல்லா நாட்களும் மகளிர் தினம் தான்!

amudu

ஒரு குடும்பத்தின் " பவர் பேங்க்" குழந்தைகளே.

ஆல்தோட்டபூபதி

நாடி, நரம்பு, ரத்தம்ன்னு எல்லாத்துலையும் அடிமைத்தனம் ஊறிப்போனவங்களால தான், அட்மினுக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்க முடியும்.

நாட்டுப்புறத்தான்

ஏய் சனியனே, சும்மா தொணதொணனு பேசி உயிர எடுத்துட்ருக்காம கொஞ்ச நேரம் அமைதியா இருடி.,

மகளிர் தின வாழ்த்து போஸ்ட்போட டைப் பண்ணிட்ருக்கேன்ல என்றார் அந்த ஏழை இணைய போராளி...!!!

ஊதா மூங்கில்

நாம வாழ இன்னொருத்தனை கெடுக்க கூடாது. போற நாட்டோட நிலைமையை நினைச்சி பாருங்க

எச்.ராஜாவை நாடு கடத்துவதே சரியான தண்டனை: இயக்குநர் பாரதிராஜா

திரு

எச்.ராஜா அனுமதியில்லாமல் அவரது "அட்மின்", பெரியார் குறித்து பதிவிட்டது கண்டனத்திற்குரியது: முதல்வர் பழனிசாமி

இந்த அரசு இருக்கும் வரை என்ன கவலை... எம்.ஜி.ஆர் சிலையை இடிப்பேன், ஜெயலலிதா சிலையை இடிப்பேன்னு கூட ஹெச்.ராஜா போஸ்ட் போடலாம்.

VASUGI BHASKAR

வீட்டுச்சுமைகளை பெண் மேல் சுமத்தி சகலகலா ஹீரோயினாக சித்தரித்து பெண்ணை கொண்டாடுவது, பெண்களுக்காக நிர்ணியக்கப்பட்ட வேலைகளை நினைவுபடுத்தவேதே அன்றி, பெண் விடுதலை ஆகாது. பிற்போக்குத்தனங்களின் குவியலான குடும்பத்தில் சமத்துவம் சாத்தியப்படாமல் சமூகத்தில் பெண் விடுதலை சாத்தியப்படாது.

புகழ்

"படிப்பு மட்டுமே நம்மை மேம்படுத்தும்" என்னும் ஒரு வாய்ப்பாவது போனதலைமுறை ஏழை மக்களுக்கு இருந்தது.

BoopatyMurugesh

பிஞ்சு குழந்தைய பாலியல் பலாத்காரம் பண்ணி, ஜாமீன்ல வந்து அம்மாவையும் கொன்னவன் மரண தண்டனைய எதிர்த்து மேல் முறையீடு பண்ணிருக்க லெவலில் சட்டமுள்ள நாட்ல,

ஹெல்மட் போடாம மனைவியோட போனவன ஆறு கிலோ மீட்டர் விரட்டி மிதிச்சு வழக்கு போட்டு தான் நீதிய நிலைநாட்டிற போறீங்களா காவல் துறையினரே?

Thalapathy Bharani

எச்.ராஜா அனுமதியில்லாமல் அவரது "அட்மின்", பெரியார் குறித்து பதிவிட்டது கண்டனத்திற்குரியது: முதல்வர் பழனிசாமி

மோடியோட அட்மின் சொன்னா சரியாதான் இருக்கும்

Lakshmanan.P

பல்லாயிரம் கோடிகளை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு கொண்டுபோய் விட்டார்கள். வங்கிகள் மூலதனமின்றி தத்தளிக்கின்றன. நீங்கள், பெரியார் சிலையை உடைக்க அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் ! வெட்கம்!!

Sathiya Kumar S

: காலேலதான இன்பாக்சுல வாழ்த்து சொன்னீங்க.... இப்ப திரும்பவும் வந்து வாழ்த்து சொல்றீங்க....

: அதனாலென்ன தோழி.... ஏன் என் ரெண்டாவது வாழ்த்த ஏத்துக்கமாட்டீங்களா...

Manivannan Nadarajan

ஆமா பூனம் பான்டேக்கு என்னாச்சு, ஏன் எல்லாரும் பான்டே பான்டேனு ஸ்டேடஸா போட்டுட்டு இருக்கீக????

அருண் கோமதி

பெரியார் சிலைக்கு ஒரு சேதம்னா அது பார்ப்பனிய அடிமைகளின் சதின்னு சொல்லிடலாம்...

ஆனா அண்ணலின் சிலைக்கு ஒரு சேதம்னா அது சமத்துவத்தை விரும்பாத ஒட்டுமொத்த அடிமைகளின் வெறுப்பு தான் காரணம்...

Arunkumar Dhanaraj

எடப்பாடியே கண்டனம் தெரிவிக்கிறார்னா யார்யா அந்த அட்மின்.. எனக்கே பாக்கணும் போல இருக்கு....

துப்புறத தவிர வேறவழியில்ல...

Subbu Raman J

பேஜ் அட்மினுக்கு

ஃபேக் அட்மின் கண்டணமா?

சரி விடு காசா பணமா!??

Dinesh Kumar

எடப்பாடி: "அட்மின்" னா என்னாயா?

செல்லூர்: உடம்பு சரியில்லைனா ஆஸ்பெட்டல்ல சேர்பாங்கல்ல...

எடப்பாடி: அந்த செருப்ப இங்க தான வெச்சேன்.

Thalapathy Bharani

இது மாதிரி எல்லாம் பிரச்சனை வந்துட கூடாதுன்னு தான் விஜய் அண்ணா பாட்டு ஓடும் போதே இந்தா பாட்டை பாடியவர் உங்கள் விஜய்ன்னு போடுவாரு

Thamim Ansari

இன்று வீட்டில கீரை குழம்பு வைக்க காரணமாக இருந்த "கீரைக்கார அம்மாவுக்கு" கடுமையான கண்டனங்கள்.

Vairam Sivakasi

யோவ்.. நேத்து என்னைய கலாச்சி FBல ஏதோ ஸ்டேட்டஸ் போட்டியாம்..!?என் பிரெண்டு போன் போட்டு சொன்னா..!?

(எந்த சண்டாள சிறிக்கின்னு தெரியலையே..!?)அது நான் இல்லம்மா என்னோட அட்மின்..

அப்டியா..!? இப்ப நான் உனக்கு குடுக்குறத அப்டியே அவனுக்கு நீ தர்ற..

-லாக் ஆஃப்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon