மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

நெட்வொர்க் ஸ்பெக்ட்ரம் அளவு உயர்வு!

நெட்வொர்க் ஸ்பெக்ட்ரம் அளவு உயர்வு!

இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கான ஸ்பெக்ட்ரம் கையிருப்பு வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவின் தொலைத் தொடர்பு வட்டாரம் ஒன்றில் எந்தவொரு நிறுவனமும் 25 சதவிகிதத்துக்கும் மேலான ஸ்பெக்ட்ரம் கையாளும் உரிமையை வைத்திருக்க முடியாது. அதேபோல, ஸ்பெக்ட்ரம் அலைவரிசைப் பிரிவு ஒன்றில் 50 சதவிகிதத்துக்கும் மேலான பங்கை வைத்திருக்க இயலாது. இந்நிலையில் தற்போது இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் நீடித்து வரும் போட்டி காரணமாக இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முயற்சி நடந்து வருகிறது. எனவே அந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் கையிருப்பு அளவை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை மார்ச் 7ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இனி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரு வட்டாரத்தில் அதிகபட்சமாக 35 சதவிகிதம் வரையிலான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளைக் கையாளும் உரிமையைப் பெறலாம். இதுகுறித்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர் கூட்டமைப்பின் பொது இயக்குநரான ராஜன் மேத்யூஸ் டி.என்.ஏ. ஊடகத்திடம் பேசுகையில், “இந்த ஸ்பெக்ட்ரம் கையிருப்பு அளவை உயர்த்தும் நடவடிக்கையால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணைவுப் பணி ஊக்குவிக்கப்படும். ஐடியா - வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ - ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனங்களின் இணைவு எளிதாகும்” என்றார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon