மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

பெண்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்!

பெண்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அருகே உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் துணை ஆணையர் ஜெயலட்சுமி கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதில், சென்னைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அங்கு வந்திருந்த பெண் காவலர்களுக்கு ஆணையர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஆணையர் "ஆண்களும் பெண்களும் சமம் அல்ல. பெண்கள் எவ்வளவு கஷ்டமான வேலையையும் துணிந்து செய்கின்றனர். வீட்டிலும் வேலை பார்த்துக்கொண்டு, மக்கள் பணியையும் செய்கிறார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம்.

பெண்கள், கண்ணுக்குத் தெரியாத பல துறைகளிலும் பணிபுரிந்துவருகின்றனர். எங்களுக்குக் கிடைத்த இங்க அங்கீகாரத்தை அனைத்து பெண்களுடனும் பகிர்ந்துகொண்டு, அவர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். பெண்கள் தினத்தன்று மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக விளையாட்டுகள் வைத்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது” என்று கூறினார்.

"மக்களுக்குச் சேவை செய்வதே முதல் கடமை. பெண்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” எனப் பெண் காவலர்கள் கூறினர்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon