மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஈகோ இல்லாத அமலா பால் - காஜல்

ஈகோ இல்லாத அமலா பால் - காஜல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் எந்தவித ஈகோவும் இன்றி சக நடிகையான அமலா பால் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

மகளிர் தினமான இன்று (மார்ச் 8) சினிமா சார்ந்த திரைப்பட அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அமலா பால் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவுலகில் தற்போது கதாநாயகிகளைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு படங்கள் உருவாகிவருகின்றன. நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துவர, அமலா பாலும் அதே பாணியைப் பின்பற்றியிருக்கிறார்.

அதோ அந்த பறவை போல என்ற பெயரில் உருவாகும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை கே.ஆர்.வினோத் இயக்குகிறார். ‘செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜான் ஆப்ரகாம் கவனிக்கிறார்.

அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளது. மேலும் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் என்ற படத்திலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon