மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்!

4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்!

இந்திய சுகாதாரத் துறையில் 2020ஆம் ஆண்டுக்குள் 4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தேவி செட்டி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் நேற்று (மார்ச் 7) நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 2018ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழாவில் நாராயணா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் தேவி செட்டி கலந்துகொண்டு பேசுகையில், "சர்வதேச அளவில் சுகாதாரத் துறையின் மதிப்பு 8 லட்சம் கோடி டாலராக உள்ளது. அதேபோல சர்வதேச அளவில் அதிக ஊழியர்களையும், 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் துறையாகவும் விளங்குகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுகாதாரத் துறை ஊழியர்கள் பற்றாக்குறை 80.2 மில்லியனாக அதிகரிக்கும். 20 லட்சம் மருத்துவர்கள் மற்றும் 60 மில்லியன் செவிலியர்கள் தேவைப்படுவார்கள் என்றும் உலக வங்கியின் ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல பெண்கள் அதிக அளவில் பங்கேற்றிருக்கும் துறையும் சுகாதாரத் துறைதான்.

அண்மையில் வெளியான பாஸ்டன் கன்சல்டிங் மற்றும் சி.ஐ.ஐ. போன்ற ஆய்வுகள் 2020ஆம் ஆண்டுக்குள் இந்திய சுகாதாரத் துறையில் 4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். அதிகளவில் இந்தியாவிற்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டித் தரும் துறையாகவும் இத்துறை உள்ளது" என்றார். கர்நாடக மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங் கார்கே பேசுகையில், "கர்நாடகா அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்க அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. யுவ யோகா திட்டத்தின் கீழ் 1.1 லட்சம் பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி தொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின் அடிப்படையில் 1000 தொழில்முனைவோருக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது" என்றார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon