மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

நாசாவின் புதிய திட்டம்!

நாசாவின் புதிய திட்டம்!

சூரியனுக்கு மனிதர்கள் தங்கள் பெயரை அனுப்பும் வாய்ப்பை தற்போது நாசா வழங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி ஆய்வு மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் எதிர்காலத்தின் முன்னோடியாகத் திகழ்கிறது. இது தற்போது சூரியனுக்கு மனிதர்கள் தங்கள் பெயரை அனுப்பும் வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் சூரியனில் இருந்து 40 லட்சம் மைல் தூரம் வரை செல்லக்கூடிய ‘பார்கர் சோலார் ப்ரோப்’ விண்கலம் வரும் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

விஞ்ஞானிகளின் பல ஆண்டு கேள்விகளுக்கான பதில்களை கண்டறியக்கூடிய இந்த விண்கலத்தில் ஒரு மைக்ரோ சிப்பின் மூலம் உலகளவில் மக்களின் பெயர்களையும் அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் http://go.nasa.gov/HotTicket என்ற தளத்தில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு நாசா கேட்டுக் கொண்டுள்ளது. 

இது குறித்து வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் அறிவியல் பிரிவின் இணை இயக்குநரான தாமஸ், "மனிதர்கள் இதுவரை செல்லாத இடத்திற்கு செல்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். விண்வெளி ஆய்வாளர்களின் 60 ஆண்டு கேள்விகளுக்கான பதில் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும். முன்னதாக இந்த விண்கலத்துக்கு சோலார் ப்ரோப் ப்ளஸ் என்று பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் விண்வெளி ஆய்வாளாரான யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக இதற்கு பார்கர் சோலார் ப்ரோப் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த விண்கலம் மணிக்கு 4,30,000 மைல் தொலைவு செல்லக்கூடியதாகும்.

அதாவது அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து ஜப்பானின் டோக்கியோவிற்கு ஒரு நிமிடத்தில் செல்லும் வேகமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon