மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 மா 2018

ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் லென்ஸ்!

ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் லென்ஸ்!

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு பயன்படும் வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் லென்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதில் அவ்வாவ்போது புதுமையான அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியிட்ட தகவலில் கூகுள் லென்ஸ் என்ற வசதியைச் சோதனை செய்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

கூகுள் லென்ஸ் என்ற வசதியின் மூலம் பயனர்கள் எடுக்கும் புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை கண்டறிவது மட்டுமின்றி, ஒரு புகைப்படத்தில் உள்ள அனைத்து பொருட்களின் தகவல்களையும் தெரிவிக்க ஏதுவாக இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது பயனர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. கூகுள் போட்டோஸ் என்ற செயலியில் கூகுள் லென்ஸ் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான சோதனை ஓட்டங்கள் முதலில் நடத்தப்பட்டு அதன் வெற்றிக்கு பின்னரே தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வியாழன் 8 மா 2018