மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

ஆண்கள் சங்கத்தினர் போராட்டம்!

ஆண்கள் சங்கத்தினர் போராட்டம்!

உலக மகளிர் தினத்துக்கு எதிராக ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் இன்று(மார்ச் 8) உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில், சாதனைப் படைத்து வரும் பெண்களுக்கும், அயராது உழைக்கும் பெண்களுக்கும், தலைவர்கள் பொதுமக்கள் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பெண்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலின் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மதுசூதனன், வெற்றிவேல், ஆல்பர்ட், அப்துல்லத்தீப் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஆண்களுக்கு எதிரான சட்ட மீறல்களைத் தடுக்க வேண்டும். ஆண்டுக்கு 10,000 திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். திருமணமான ஆண்கள் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் மனைவிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆண்கள் வரதட்சணை கொடுமை என்ற பெயரில் கணவரையும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்துவதைத் தடுத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், சட்டத்தின் துணையோடு ஆண்களை அடிமைப்படுத்தாதே. ஆண்களுக்கு ஜீவனாம்ச சட்டத்தை அமல்படுத்து போன்ற வாசகங்களை முழங்கினர்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon