மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

மிளகு இறக்குமதியால் விலைச் சரிவு!

மிளகு இறக்குமதியால் விலைச் சரிவு!

வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் மிளகின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

தெற்காசிய இலவச வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா - இலங்கை இலவச வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக இந்தியாவுக்குள் அதிகளவு மிளகு இறக்குமதி செய்யப்படுகிறது. இலங்கையின் மிளகு உற்பத்தி அதிகமாக இருப்பதால் அந்நாட்டில் விளையும் மிளகை இந்தியாவில் வந்து குவிக்கின்றனர். இதனால் இந்திய மிளகு விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் இறக்குமதி செய்யப்படும் மிளகுக்கு 8 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு மிளகு விவசாயிகள் தங்களது விளைபொருளைச் சந்தைகளில் போதிய விலைக்கு விற்பனை செய்ய இயலாத சூழல் உள்ளது.

மிளகு இறக்குமதியால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, உள்ளூர் சந்தைகளில் மிளகின் விலையும் சரிந்து வருகிறது. இறக்குமதி மிளகின் விலை கிலோவுக்கு ரூ.360 முதல் ரூ.365 வரையில் விற்பனையாவதால் உள்நாட்டில் உற்பத்தியாகும் மிளகின் விலையும் ரூ.360 ஆகக் குறைந்துள்ளது. மார்ச் 7ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற சந்தையில் ரூ.360 என்ற விலைக்கு 15 டன் அளவிலான மிளகு வர்த்தகமானது. கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மிளகும் ரூ.360க்கு மட்டுமே விற்பனையானது. கேரளாவின் புல்பாலி மற்றும் பதேரி பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மிளகும் ரூ.360க்கு மட்டுமே விலைபோனது. மிளகின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 குறைந்துள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon