மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் யார் தெரியுமா?

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் யார் தெரியுமா?

உலக பணக்காரர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் அதிக சொத்து மதிப்பு மிக்க இளம் பணக்காரராக பேடிஎம் நிறுவனர் விஜய் ஷேகர் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் உலகின் அதிக சொத்து மிக்கவர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் உலக அளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மொத்தம் 2,208 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 39 வயதான விஜய் ஷேகர் ஷர்மா 1,394ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு தற்போது 1.7 பில்லியன் டாலராக இருக்கிறது. விஜய் ஷேகர் ஷர்மாவின் பேடிஎம் நிறுவனம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைச் சேவைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு பேடிஎம் சேவையில் சுமார் 250 மில்லியன் பேர் இணைந்துள்ளனர். இந்தச் செயலி வாயிலாகத் தினசரி 70 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

2018ஆம் ஆண்டுக்கான சொத்து மிக்க 2,208 பணக்காரர்கள் 63 பேர் மட்டுமே (இளம்) 40 வயதுக்குக் குறைவானவர்கள். அதில் 34 பேர் சொந்தமாகத் தொழில் தொடங்கி சொத்து ஈட்டியவர்களாவர். மேற்கூறிய உலகின் 63 இளம் கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 265 பில்லியன் டாலராகும். சென்ற ஆண்டுக்கான பட்டியலில் இந்த மதிப்பு 208 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் அதிக சொத்து மிக்க இளம் பணக்காரர்களாக அலெக்ஸாண்ட்ரா (21) மற்றும் கதரினா (22) சகோதரிகள் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு தலா 1.4 பில்லியன் டாலராகும். இவர்கள் இருவரும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இளம் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளனர்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon