மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பார்த்திபன் மகள் திருமண விழாவில் கமல்

பார்த்திபன் மகள் திருமண விழாவில் கமல்

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிகழ்வில் கமல்ஹாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர் பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகள் கீர்த்தனா. பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் இயக்குநராகும் லட்சியத்துடன் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்தார். தற்போது ஒரு சினிமா இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.

இந்த நிலையில், கீர்த்தனாவுக்கும், சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரது திருமணம், மகளிர் தினமான இன்று (மார்ச் 8) காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வை அடுத்து இன்று மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. இதில் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon