மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வாரிசு ஜோடி அறிமுகமாகும் ‘கலசல்’!

வாரிசு ஜோடி அறிமுகமாகும் ‘கலசல்’!

நடிகை அம்பிகாவின் மகனும், நடிகர் லிவிங்ஸ்டனின் மகளும் ஒரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்கள்.

இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அஸ்வின் மகாதேவன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் கலசல்.

நடிகர், நடிகைகளின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாவது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுதான். இருப்பினும் 1980களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த அம்பிகாவின் மகனான ராம் கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகும் இதே படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இவர்களோடு ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன் பாப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாளை (மார்ச் 9) பழனியில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் நடிகை ராதாவின் மகள் துளசியும் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon