மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

இந்திய அணியை சமாளிக்குமா வங்கதேசம்?

இந்திய அணியை சமாளிக்குமா வங்கதேசம்?

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி-20 தொடரில் இன்று (மார்ச் 8) நடைபெறவிருக்கும் போட்டியில் இந்தியா வங்கதேசம் அணிகள் பலபரிட்சை நடத்த உள்ளன.

கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன. முதல் போட்டி இதே மைதானத்தில் நடைபெற்ற போது இந்திய அணி இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது. முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணி முதல் போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவியது. ஆனால் இந்திய அணி வங்க தேசத்தை எதிர்த்து சிறப்பாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த 10 டி-20 போட்டியில் வங்க தேச அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய அணியை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வேர்ல்ட் டி-20ல் எதிர்கொண்ட வங்கதேச அணி கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 9 ரன்களை மட்டும் சேர்த்து தோல்வியைத் தழுவியது. கடந்த ஒரு வருடமாக வங்கதேச அணி விளையாடிய ஒட்டு மொத்த டி-20 போட்டிகளையும் சேர்த்து பார்த்தால், அதில் மூன்று வீரர்கள் மட்டுமே 100 ரன்களை ஒட்டு மொத்தமாக கடந்துள்ளனர். எனவே மோசமான நிலையிலே வங்கதேச அணி உள்ளது. இந்திய அணியில் அனுபவ வீரர்கள் இல்லாத பொழுதும் வங்கதேச அணியை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon