மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

இந்தியன் வெல்ஸ்: முன்னேறிய இந்திய வீரர்கள்!

இந்தியன் வெல்ஸ்: முன்னேறிய இந்திய வீரர்கள்!

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் நேற்று (மார்ச் 7) நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு முன்னேறினார்.

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் மார்ச் 5ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், அமெரிக்க வீரர் மைக்கேல் உடன் பலபரிட்சை நடத்தினார். அதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ராம்குமார் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த தகுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.

அதன்படி இன்று (மார்ச் 8) நடைபெறும் மற்றொரு தகுதி சுற்றுப் போட்டியில் ராம்குமார் மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரியை எதிர்கொள்கிறார். யுகி பாம்ப்ரி நேற்று நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் டென்னிஸ் நோவிகோவ்வை எதிர்கொண்டு, 7-5, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்த போட்டிக்குத் தகுதி பெற்றார். இது தகுதிச் சுற்று என்பதால் இதில் வெற்றி பெறும் ஒரு வீரர் மட்டுமே இந்த தொடரில் அடுத்ததாக முன்னேற முடியும். எனவே இரண்டு இந்திய வீரர்களில் அடுத்த சுற்றிற்கு முன்னேறப் போவது யார் என்பது போட்டியின் முடிவில் தெரியவரும்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon