மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

விமானிகளை கௌரவித்த ஏர் இந்தியா!

விமானிகளை கௌரவித்த ஏர் இந்தியா!

மகளிர் தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா நிறுவனம் பெண் விமானிகளை கௌரவித்துள்ளது.

பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவற்றிற்காக போராட ஆரம்பித்தனர். இந்தப் போராட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவியது. இறுதியாக 1913 ஆம் ஆண்டு முதல், மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் பெண்களை கெளரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஏர் இந்தியா நிறுவனம் 12 ஆண்டுகளாக மகளிர் தினத்தன்று, பெண்களை கௌரவப்படுத்துவதற்காக பெண்களைக் கொண்டே விமானத்தை இயக்கி வருகிறது. அதன்படி, சென்னையிலிருந்து அந்தமானுக்கு 182 பயணிகளுடன் சென்ற விமானத்தைப் பெண் விமானிகளான தீபாவும், ஷஸ்டியாவும் இயக்கினர். பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனைக்காக பெண் ஊழியர்களால் விமானத்தை இயக்கி உலகைச் சுற்றி வந்தது. அந்தப் பயணத்தின்போது, பயணச்சீட்டை சரிபார்க்கும் பணியாளர்கள், விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு பணியாளர்கள், விமானம் புறப்படுவதற்குமுன் அதற்குச் சான்றிதழ் அளிக்கும் பொறியாளர்கள் மற்றும் விமானம் புறப்படவும், தரையிறங்கவும் அனுமதியளிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் என அனைவருமே பெண்கள். இந்த விமானம் பெண்களின் கட்டுப்பாட்டிலேயே உலகைச் சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon