மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

நியாயவிலைக் கடையில் தீ விபத்து!

நியாயவிலைக் கடையில் தீ விபத்து!

கரூர் அருகே பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்கள் எரிந்தன.

கரூர் மாவட்டம், பெரியகுளத்துப்பாளையத்தில் செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடையில் இன்று(பிப்ரவரி 8) காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு, புகை வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைப்பதற்குள் நியாயவிலைக் கடையில் உள்ள அரிசி மற்றும் சர்க்கரை மூட்டைகளில் தீ பரவி எரிந்து வீணாயின. மேலும் கடையில் 80 மூட்டை அரிசியும், 8 மூட்டை சர்க்கரையும் மற்றும் மற்ற உணவுப்பொருட்களும் தீயில் எரிந்தன. இந்தத் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon