மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 17 நவ 2019

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிவேதா

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிவேதா

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஒருநாள் கூத்து என்ற தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நிவேதா பெத்துராஜ். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஹோம்லியாக வலம்வந்த நிவேதா, பார்ட்டியில் கிளாமராக வலம் வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இதனால் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகியதுடன், அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து ஆக்டிவாக செயல்பட்டுவந்த நிவேதாவுக்கு சிலரால் சிக்கலும் ஏற்பட்டது. அவரது ட்விட்டர் பக்கத்தில் தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகள் வந்ததால் மனவருத்தம் அடைந்த அவர், தனது ட்விட்டர் கணக்கைச் செயலிழக்கச் செய்துள்ளார். நிவேதாவின் இந்த முடிவால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும், தகாத கமென்ட்களாலும் மன உளைச்சலுக்குள்ளான சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார். அவரைப் போலவே நிவேதாவும், அநாகரிகமான ரிப்ளைகளை எதிர்கொள்ள முடியாமல் ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறி இருக்கிறார்.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon