மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கார்த்திக் சுப்புராஜின் பேசாத படம்!

கார்த்திக் சுப்புராஜின் பேசாத படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மெர்குரி திரைப்படத்தின் டீசர் வெளியாகி தற்போது கவனம் பெற்று வருகிறது.

குறும்படங்களிலிருந்து திரைத் துறைக்கு வந்த இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி திரைப்படத்தில் வித்தியாசமான பாணியில் களமிறங்கவுள்ளார். சினிமா என்பது காட்சி ஊடகம் என்றாலும் தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் கதை சொல்வதற்குக் காட்சியைவிட வசனத்தையே சார்ந்திருக்கின்றன. இதை மாற்றிக்காட்டும்விதமாக கார்த்திக் சுப்புராஜ் வசனமே இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

பிரபு தேவா வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தின் டீசரை தனுஷ், நிவின் பாலி, ராணா டகுபதி, ராக்ஷித் ஷெட்டி எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் நேற்று (மார்ச் 7) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு மொழியிலும் உள்ள ரசிகர்களைக் கவர இந்த ஏற்பாடாக இருந்தாலும் படம் பார்க்க எந்த மொழியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையே டீசர் காட்டுகிறது. சோதனை முயற்சியாக இந்த முடிவைப் பார்த்தாலும் டீசரில் இடம்பெறும் காட்சியில் மூச்சுவிடும் சத்தத்தைவிட வசனத்துக்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை.

சைலண்ட் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படத்தில் டீசரிலேயே பிரபு தேவா பயம் காட்டுகிறார். படம் பற்றிய எதிர்பார்ப்பை டீசர் அதிகரித்துள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon