மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

இறக்குமதியால் கொப்பரை விலை சரிவு!

இறக்குமதியால் கொப்பரை விலை சரிவு!

இந்தோனேசியாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் கொப்பரை விலை உள்நாட்டில் குறைந்துள்ளதாகக் கொச்சின் எண்ணெய் வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொச்சின் எண்ணெய் வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் தலாத் மஹமூத் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “சென்ற மாதம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15,000 ஆக இருந்த கொப்பரையின் விலை தற்போது தமிழ்நாட்டில் ரூ.12,000 ஆகவும், கேரளாவில் ரு.13,000ஆகவும், கர்நாடகாவில் ரூ.11,000 ஆகவும் குறைந்துள்ளது. தேங்காய் வரத்து அதிகமானதாலும், பெரு நிறுவனங்களின் தலையீட்டாலும் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் விலை கேரளாவில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.17,300 ஆகவும், தமிழ்நாட்டில் ரூ.16,800 ஆகவும் குறைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டிய உரிமத் திட்டத்தின் கீழ் தேங்காய் மேம்பாட்டு வாரியம் சிறிய அளவிலான கொப்பரைகளை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்தது. சில எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் தேவைகளுக்கும், கொள்முதலைக் குறைப்பதற்காகவும் கொப்பரைகளைப் பதுக்கி வைத்தன. இதனால் கொப்பரையின் விலை குறைந்தது. இதனால் இம்மாதத்தின் அடுத்த பருவத்தில் வரத்து அதிகரித்து தேங்காயின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.30 ஆகவும், கொப்பரையின் விலை ரூ.100 ஆகவும், தேங்காய் எண்ணெய்யின் விலை ரூ.150 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon