மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஏர்செல் அலுவலகங்களுக்குப் பாதுகாப்புக் கோரி வழக்கு!

ஏர்செல் அலுவலகங்களுக்குப் பாதுகாப்புக் கோரி வழக்கு!

தமிழகம் முழுவதும் உள்ள ஏர்செல் நிறுவன அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

ரூ.35 ஆயிரம் கோடி கடன் உள்ளதால் தங்கள் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கக்கோரி ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில், 20 நாள்களாக பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் விஷமிகள் சென்னையில் உள்ள தங்கள் நிறுவன அலுவலகங்களின் முன்பு கூடி பெண் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து டிஜிபி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை

ஊழியர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். நிறுவனம் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, அனைத்து அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி ஏர்செல் நிறுவனத்தின் பொது அதிகாரம் பெற்ற பாலாஜி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (மார்ச் 7) நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏர்செல் நிறுவனத்துக்குப் பாதுகாப்பு வழங்க டிஜிபி ஏற்கெனவே காவல் துறையினருக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, ஒவ்வோர் அலுவலகத்துக்கும் தனி காவலர் நியமிக்க முடியாது என்று கூறி வழக்கை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon