மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

பின்னுக்குத் தள்ளப்பட்ட தோனி!

பின்னுக்குத் தள்ளப்பட்ட தோனி!

மின்னம்பலம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்குப் புதிய சம்பள உயர்வு குறித்த தகவலை பிசிசிஐ நேற்று (மார்ச் 7) வெளியிட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பளம் குறைவாக உள்ளதாகவும் அதனால் சம்பள உயர்வு தேவை என்றும் விராட் கோலி, மஹேந்திர சிங் தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐயிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர். அதற்கு நீண்ட நாள்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்த பிசிசிஐ நேற்று புதிய ஊதிய உயர்வு குறித்த தகவலை வெளியிட்டது.

ஏற்கெனவே ஏ, பி மற்றும் சி கிரேடு வீரர்கள் என மூன்று பிரிவு வீரர்களுக்கு ஏற்றார்போல் ஊதியம் வழங்கி வந்த நிர்வாகம் புதிதாக ‘ஏ+’ என்ற புதிய கிரேடை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஏ+ கிரேடு வீரர்களுக்கு ரூ.7 கோடியும், ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் ஊதியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் ஒவ்வொரு பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களும் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏ பிரிவில் முன்னாள் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, விரிதிமான் சஹா, முரளி விஜய், புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோரும், பி பிரிவில் உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், சஹல், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். சி பிரிவில் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஆக்ஸர் படேல், கருண் நாயர், பார்திவ் படேல், ஜெயந்த் யாதவ் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

புவனேஷ்வர் குமார், பும்ரா போன்ற இளம் வீரர்கள் ஏ+ கிரேடில் இடம்பெற்றுள்ள நிலையில் முன்னாள் வீரர் தோனி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon