மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பெண்களுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருது!

பெண்களுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருது!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உயரிய விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காகப் போராடிய தன்னார்வ அமைப்புகளுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பாக பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக நாரி சக்தி புரஸ்கார் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனிநபர், நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பெயர்கள் நேற்று (மார்ச் 7) அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜெயம்மா பந்தாரி, கே.ஷியாமலாகுமாரி, வானஸ்ரீ, கார்கி குப்தா, டாக்டர்.சிந்துதாய் சப்கல், சபர்மதி திகி, மிட்டல் படேல், டாக்டர் லிசிமோல் ஃபிலிபோஸ் பமாதிகாந்தாதில், சிரோம் இந்திரா, உர்மிளா பாலாவந்த் அப்தே, தீபிகா குந்தாஜி, பூர்ணிமா பார்மன், அனிதா பராவாஜ், பார்தி காஷ்யப், அம்பிகா பெரி, கவுரி மால்கி, புஷ்பா கிரிமாஜி, ஸ்ரீஜான், சி.கே.துர்கா, ரேகா மிஷ்ரா, தின்லாஸ் ஷோரோல், மேக்விச்ஜ்முஷ் தாக், நவிகா சாகர் பாரிகிரமா, மது ஜெயின், ஜெஸ்டன் பீமா, எம்.எஸ்.சுனில், ஷீலா பாலாஜி, மால்விகா ஐயர், ரவீனா உமாதேவி நாகராஜ், அனுராதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நீதிபதி கீதா மிட்டல் ஆகியோருக்கு நாரி சக்தி புரஸ்கார் வழங்கப்பட உள்ளது.

மேலும், பேடி சிந்தாபாத் பேக்கரி, ஆரண்யா நேச்சுரல்ஸ், அவானி அமைப்பு, கருணா சொசைட்டி ஆஃப் அனிமல்ஸ் மற்றும் நேச்சர், ஐஎன்எஸ்வி தாரிணி குழு, ஒன் ஸ்டாப் மையம், ராய்ப்பூர், மில்லட் நெர்வொர்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் ஆஃப் பஞ்சாப் போன்ற அமைப்புகளும் இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருதுகளைச் சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8) ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon