மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 மா 2018

ராணுவ தளவாடங்கள்: களமிறங்கிய கோவை!

ராணுவ தளவாடங்கள்: களமிறங்கிய கோவை!

இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த கண்காட்சி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்தபோது, கோவையில் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் மையத்தை உருவாக்க கொடிசியாவுக்கு 20 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கோவை பிராந்தியத்தில் உள்ள சிறு, குறு, மத்திய ரக தொழில் நிறுவனங்களால் ராணுவ தளவாடங்களில் எந்த வகையிலான பொருள்களைத் தயாரிக்க முடியும் என்பதை அறிந்துகொள்வதற்காக, பாதுகாப்புத் துறைக்கு சம்பந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் நேரடியாக பங்குபெறும் வகையில் கோவையில் கண்காட்சி நடைபெற்றது. மார்ச் 5ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி மார்ச் 6ஆம் தேதி நிறைவடைந்தது.

இதில், ராணுவ உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களான டி.ஆர்.டி.ஓ., இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பெல், ஆர்டினன்ஸ் பேக்டரி, பாரத் டைனமிக் லிட், பாரத் எர்த் மூவர்ஸ், மிதானி உள்ளிட்ட நிறுவனங்கள், இந்திய முப்படைகள் என முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டால்களும், 400 வகையான ராணுவ தளவாட மற்றும் உதிரிப் பொருள்களும் இடம்பெற்றன.

கண்காட்சியில் ஸ்டால் அமைத்திருந்த நிறுவனங்கள் பற்றிய விவரம்:

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்:

கோவை தொழில் கண்காட்சியில், 80 வகையான பொருள்களை இந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. இப்பொருள்கள் அனைத்தும் ஒரு லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்புடையவை.

பாரத் எர்த்மூவர்ஸ் லிமிடெட்:

ராணுவத்துக்கு முக்கியமாக தேவைப்படும் லாரிகள், ரயில் பெட்டிகள், இன்ஜின்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. மொத்தம் 32 வகையான பொருள்களைக் காட்சிப்படுத்தியுள்ள இந்த நிறுவனம், முறையான விநியோகஸ்தர்களைத் தேடி வருகிறது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ்:

ராணுவ வாகனங்களுக்கான கவசங்கள், கியர்கள், விளக்குகள் மற்றும் பொதுவான பயன்பாட்டுக்குப் பல்வேறு உதிரிபாகங்களை தயாரிக்கிறது. 58 வகையான பொருள்களை இந்த நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

பாரத் டைனமிக்ஸ்:

சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தயார் செய்யும் இந்த நிறுவனத்துக்கு தேவையான பல்வேறு பாகங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய நிறுவனங்களுக்கு சரியான விநியோகஸ்தர் இல்லை. இதனால், இந்நிறுவனத்தின் ஸ்டாலும் இடம்பெற்றிருந்தது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

வியாழன் 8 மா 2018