மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அருள்நிதி படத்தைக் கைப்பற்றிய சன் டிவி!

அருள்நிதி படத்தைக் கைப்பற்றிய சன் டிவி!

அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

அருள்நிதி, மஹிமா நம்பியார் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம், இரவுக்கு ஆயிரம் கண்கள். கே.வி.ஆனந்த், அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மு.மாறன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கால் டாக்ஸி டிரைவராக அருள்நிதி நடிக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை பெரிதும் பேசப்படும் என்று ஏற்கெனவே இயக்குநர் மாறன் கூறியிருந்தார். படத்தின் பணிகள் நிறவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைபற்றியுள்ளது. அதேநேரம் தமிழக விநியோக உரிமையை ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் வாங்கியுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் படம் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon