மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

உபயோகமில்லாப் பொருளாதார மண்டலங்கள்!

உபயோகமில்லாப் பொருளாதார மண்டலங்கள்!

இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்களில் 52 சதவிகித நிலங்கள் உபயோகப்படாமல் இருப்பதாக வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்ச் 5ஆம் தேதி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சவுத்ரி பதிலளிக்கையில், “பொருளாதார மண்டலத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 52 சதவிகித நிலங்கள் உபயோகிக்கப்படாமல் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள 375 பொருளாதார மண்டலங்களுக்கான மொத்த நிலப்பரப்பு 45,629 ஹெக்டேர்கள் ஆகும். இதில் 21,872.71 ஹெக்டேர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 23,779.19 ஹெக்டேர்கள் உபயோகிக்கப்படாமல் உள்ளன. அதோடு 375 மண்டலங்களில் 93.47 சதவிகித நிலம் தரிசாகும். 5.28 சதவிகிதம் ஒற்றைப் பயிரிடல் நிலமாகும். மீதமுள்ள 1.25 சதவிகிதம் இரட்டைப் பயிரிடலுக்கான நிலமாகும்” எனத் தெரிவித்தார்.

இதுபற்றி வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு மக்களவையில் பேசுகையில், “இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான காரணமே அந்நிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகளைச் சீரமைத்து தேவையான மாற்றங்களைக் கொண்டுவர உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதனால் நாட்டின் ஏற்றுமதி கணிசமான அளவில் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon