மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

குறைந்த விலை மாடல்களில் வைரஸ்!

குறைந்த விலை மாடல்களில் வைரஸ்!

குறைந்த விலைகொண்ட ஸ்மார்ட்போன்களில் இன்பில்டாக வைரஸ்கள் தொற்றிக்கொண்டுள்ளதாக ரஷ்ய நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் புதிய நம்பகத்தன்மையற்ற அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதன் மூலம் வைரஸ்கள் பெரும்பாலும் பரவி பயனர்களின் தகவல்கள் திருடப்படுவது அதிகம் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலும் பயனர்கள் நம்பகத்தன்மையற்ற புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆனால், குறைந்த விலைகொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் Triada என்ற வைரஸ் இன்பில்டாக உள்ளது என்றும், அதன் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் ரஷ்யாவைச் சேர்ந்த Dr.web என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. தகவல் திருட்டு குறித்து டாக்டர் வெப் நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் குறைந்த விலைகொண்ட சுமார் 40 மாடல்களில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்துவருவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீனா நிறுவனமான லீகோ மற்றும் டூகீ நிறுவனத்தின் மாடல்களில் வைரஸ்கள் இன்பில்டாக இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாடல்களால் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவது மட்டுமின்றி, மெசேஜ்களை உளவுபார்ப்பது மற்றும் இணையத் தேடல்களைக் கண்காணிப்பது எனப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சுமார் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் மற்ற அப்ளிகேஷன்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon