மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

தரம் உயரும் இந்திய ரயில்கள்!

தரம் உயரும் இந்திய ரயில்கள்!

சிசிடிவி கேமிரா, இலவச வைஃபை, வண்ணம் பூசுதல் போன்றவற்றின் மூலம் ராஜ்தானி, சதாப்தி போன்ற 16 ரயில்களின் தரத்தை உயர்த்தும் பணியில் வடக்கு ரயில்வே இறங்கியுள்ளது.

‘ஸ்வர்ண புராஜெக்ட்’ என்ற திட்டத்தின் கீழ் டெல்லி - காத்கோடம் வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய ரயிலில் சிசிடிவி கேமரா, ரயில் பெட்டிகளில் உட்புற மற்றும் வெளிப்புறங்களில் வண்ணம் பூசுதல், இலவச வைஃபை உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்திட்டமானது துவக்கத்தில் 11 சதாப்தி மற்றும் 5 ராஜ்தானி ரயில்களில் ரூ.2.35 லட்சம் கோடி செலவில் ரயில்வே துறையால் செயல்படுத்தப்படவுள்ளது. டெல்லி - டேராடூன் வழித்தடத்தில் இயங்கும் சதாப்தி ரயில்களில் மேற்கூறிய மேம்பாட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் மாத நிறைவுக்குள் அந்த ரயில்கள் இயக்கப்படும் எனவும், இதர ரயில்களில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தரம் உயர்த்தும் பணிகள் நிறைவுபெறும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

வடக்கு ரயில்வே சார்பாக சிசிடிவி கேமிராக்கள் மற்றும் ஜிபிஎஸ் தகவல் தொடர்புக் கருவிகள் பொருத்தப்படுகின்றன. ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைகளும் தரம் உயர்த்தப்பட்டு, எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்படும் என்று டெல்லி பிரிவு ரயில்வே மேலாளரான ஆர்.என்.சிங், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஜம்மு, திப்ரூகர், பிலாஸ்பூர், போபால், அஜ்மீர், ஆக்ரா போன்ற பகுதிகளுக்குச் செல்லும் ராஜ்தானி ரயில்கள் புதிய வடிவத்தில் இனி காட்சியளிக்கும்.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon