மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

மோகன்லால் - ஸ்ரேயா கோஷல் கூட்டணி!

மோகன்லால் - ஸ்ரேயா கோஷல் கூட்டணி!

பன்முகத் திறமை கொண்ட தென்னிந்திய நடிகர்களில் மோகன்லாலும் ஒருவர். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு ஏற்றாற்போல, மலையாளத்தின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் இவருடையது என்ற பெருமையும் கொண்டவர்.

நடிகராக மட்டுமே இல்லாமல் சினிமாவின் அனைத்துத் தளங்களிலும் இயங்கி, ஒரு படத்தை வெற்றிபெறச் செய்வது மோகன்லாலின் ஸ்பெஷாலிட்டி. அடுத்த திரைப்படத்திற்கு புரமோஷன் செய்யும் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார். ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து ஒரு பாடல் பாடவிருக்கிறார் மோகன்லால்.

1985இலிருந்து திரைப்படப் பாடகராகச் செயல்பட்டுவருபவர் மோகன்லால். இதுவரை 45 பாடல்களைப் பாடியிருக்கும் இவர், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘நீராலி’ திரைப்படத்துக்கான வேலைகளில் இருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ரொமாண்டிக் டூயட் பாடல் ஒன்றை இவர் பாடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக, புலிமுருகன் திரைப்படத்தில் ‘மலையாட்டூர் மலையும் கயாரி’ என்ற பாடலை மோகன்லால் பாடியிருந்தார். அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் படத்தின் புரமோஷனுக்காகப் பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்தப் பாடலும் அது போன்றதொரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon