மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

பெரியார் தொண்டரானார் எச்.ராஜா: அப்டேட் குமாரு

பெரியார் தொண்டரானார் எச்.ராஜா: அப்டேட் குமாரு

கட்சி ஆரம்பிச்சு, மாநாடு நடத்தி, மதுரை வரைக்கும் போய் அவ்வளவு செலவு செஞ்சி ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் கமல். நமக்கு அவ்வளவு தூரம்லாம் வேண்டாம் கண்ணான்னு சொல்லிட்டு யாரோ எதுக்காகவோ கூட்டுன கூட்டத்தை தன் கட்சி மாநாடா மாத்தி சென்னைக்குள்ளயே இருந்து எல்லாரையும் தன்னை பத்தி பேச வச்சிட்டாரு ரஜினி. இதுலாம் என்ன பிரமாதம்.. நம்மாளு ஒருத்தர் இருக்காரு சார்.. வீட்டுல இருந்தாப்ல பேஸ்புக்ல ஒரே ஒரு ஸ்டேட்டஸ் தான்ங்க போட்டாரு.. உலகத்துல தமிழ் பேசுறவங்க எங்கல்லாம் இருக்காங்களோ அங்க எல்லாம் அவங்களுக்குள்ள பேசுற டாப்பிக்கா ஒரே நாள்ல மாறிட்டாரு. என்ன யாருன்னு தெரியாத மாதிரி கேட்குறீங்க நம்ம எச்.ராஜா தான். பெரியார் யாருன்னு மத்த ஸ்டேட்ல இருக்குறவங்களுக்கும் சொல்றதுக்காக இவர் படுற பாடு இருக்கே.. அய்யய்யோ சொல்லி முடியாதுங்க. அதுக்காக இவர் வாங்கி கட்டிக்குற வார்த்தைகளையும் கேட்டு முடியாதுங்க..

@Kozhiyaar

குழந்தைகள் வாழும் வீட்டில் எந்த பொருளையும் அடுக்கி வைப்பது வீண் வேலையே!!!

@Kozhiyaar

எச் ராஜா அவர்கள் செய்யும் ஓரே நல்ல காரியம், திராவிடக் கட்சிகளே செய்ய தவறியதை செய்துக் கொண்டிருக்கிறார்!!

பெரியாரை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்!!

நன்றிகள்!

@Venkatbrave

இதே வேகத்துல தலைவர் 100மீட்டர் மாதிரி ஒட்டப்பந்தயம் ல ஓடி தனியா வின் பண்ணா ரைட்டு

இல்ல

U turn எடுத்து தொடர் ஓட்டம் மாதிரி ஓடி காவி க்கு பாஸ் குடுத்தாருனா

கூப்புல உட்கார வேண்டியது தான்

@ArunkumarTNR

பெரியார் சிலை உடைக்கப்படும் என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததை நீக்கினார் எச்.ராஜா

என்ன ரவுடி சார் இப்படி பொதக்கடினு கால்ல விழுந்துட்டிங்க!!

@sultan_Twitz

பெரியார் சிலை அல்ல சிங்கம் - ஜெ.தீபா #

எச்.ராஜா நவ்: புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முலைக்கும்னு கனாவா கண்டேன்!?

@Kozhiyaar

"வார நாட்களில் லீவுன்னா என்ன பண்ணுவீங்க!?"

"ரெஸ்ட் ஃபுல்லா எடுப்பேன்!!"

"அப்ப சனி ஞாயிறு!?"

"ஃபுல்லா ரெஸ்ட் எடுப்பேன்!!"

@sendil

எவ்ளோதான் படிச்சிருந்தாலும் , போன அன்லாக் பண்ண கைநாட்டு தான் வைக்கணும்!!

தமிழ்_ஹைக்கூ

@manipmp

அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும்

-லெனின் .

@senthilcp

தலைவரே!பெரியார்"பற்றி"அவர்"கொள்கைகள்"பற்றி உங்களுக்கு,என்னென்ன தெரியும்?

எதுவும் தெரியாது

;பின்ன ஏன் அவர்"சிலையை"உடைக்கனும்னீங்க?

அப்ப தான் மீடியா"ல"பரபரப்பா"பேசப்படுவோம்

@iamkarthikeyank

23 மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய ஒரு கட்சியால் மட்டும்தான் தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் - தமிழிசை

இங்க என்ன கோடிட்ட இடங்களை நிரப்புகன்னு போர்ட்டா போட்டுருக்கு நீங்க வந்து நிரப்புறதுக்கு .

@navi_n

'லெனினுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்மந்தம்?' என்று அமெரிக்கன் கண்டுபிடித்த பேஸ்புக்கில் எழுதிவிட்டதை உணர்ந்து நீக்கிய பிறகு, அதை ஓலைச்சுவடியில் எழுதி தெருத் தெருவாக விநியோகம் செய்யக் கிளம்பினார் அந்த அறிவாளி எச்.ராஜா.

@rahimgazali

திரிபுராவில் ஆட்சியை பிடிப்பதைவிட, லெனின் சிலையை அகற்றுவதுதான் பாஜகவுக்கு முக்கிய அஜெண்டாவாக இருந்திருக்கும்போல...

@Giri47436512

எச். ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை... தமிழிசை விளக்கம்!

துபாயா? அது இங்குட்டு

தூத்துக்குடி பக்கமோ

ஈரோட்டு பக்கமோ இருக்குது..

மொமண்ட்..

@Arun Pandiyan

ரஜினி, கமல் வீட்டுக்கு இன்னும் ரெய்டு போகல....

அப்ப அதானே

@nandhu_twitts

படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வர வேண்டாம் மாணவர்களுக்கு ரஜினி அறிவுரை - செய்தி

ஓய்வெடுக்கும் காலத்தில் அரசியலுக்கு வர வேண்டாம் ரஜினிக்கு மாணவர்கள் அறிவுரை..!!

@iam_susi

ஓகி புயல் வந்தப்ப எங்க இருந்தானுங்கன்னு தெரியல.

இப்ப லைனா வராங்க அரசியலுக்கு...

@HAJAMYDEENNKS

H.ராஜாவுக்கு பிடித்த விளையாட்டு மூக்கு உடைத்தல் போட்டி.. அதுல சுவாரஸ்யம் என்னன்னா உடைபடுறது எல்லாம் அவருடைய மூக்கு மட்டும்தான் !

@Manoj Kumar

இதுல பியூட்டி என்னனா,, எச்.ராசாவுக்கு விழுந்த அடிய பார்த்து,,,,

'பெரியார் பூமி எங்கிருக்கு காமி'னு எகத்தாளம் பேசுன சீமானே, பெரியாரை ஆதரிச்சு,எச்.ராஜாவை கண்டித்தது தான்,,,,

@Nandhini Anandan

எக்காரணம் கொண்டும் பி.ஜே.பி யை தமிழ்நாட்டில் வளரவிடக்கூடாது என்பதற்காக அயராமல் பாடுபடும் எச்.ராஜாவின் பணி தொய்வின்றி தொடரட்டும்

@Aazhi Senthil Nathan

லெனின், பெரியார், அம்பேத்கர் - மூணு பேருக்கும் சேர்த்து ஓரே இடத்தில் சிலை வைக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த இடத்துக்கு 'திரிபுர மைதானம்" என்று கூட பெயர்வைக்கலாம்!

@வாசுகி பாஸ்கர்

“தம்பி, உன் முகத்தை மட்டும் காட்டு போதும்” ன்னு அண்ணா எம்ஜிஆரை பார்த்து சொல்லமாயிருந்திருந்தா, கமலுக்கும், ரஜினிக்கும் பதில் இங்கே பல “கலைஞர்கள்” ஒருவேளை உருவாகி இருக்கக்கூடும்.

-லாக் ஆஃப்

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon