மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

கரும்பு: ரூ.14,000 கோடி நிலுவைத் தொகை!

கரும்பு: ரூ.14,000 கோடி நிலுவைத் தொகை!

அதிக உற்பத்தி மற்றும் சந்தையில் விலைச் சரிவு போன்ற காரணங்களால் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.14,000 கோடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக விவசாயிகளிடமிருந்து சர்க்கரை ஆலைகள் வாங்கும் கரும்புக்கான தொகையை அடுத்த 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அப்படி வழங்கப்படாமல் தாமதமானால் அது நிலுவைத் தொகையாக மாறிவிடுகிறது. அந்த வகையில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு விவசாயிகளுக்குச் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.5,553 கோடியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலக் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.2,714 கோடியாகவும், மகாராஷ்டிர மாநிலக் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.2,636 கோடியாகவும் இருக்கிறது. இவ்வாறாக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை மட்டும் ரூ.13,932 கோடியாக இருப்பதாக இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதால் ஏற்கெனவே சந்தையில் போதிய விலையில்லாமல் தவித்து வரும் விவசாயிகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரையில், நடப்பு சர்க்கரைப் பருவத்தில் (2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரை) இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 26.1 மில்லியன் டன்னாக இருக்கும் என்று இஸ்மா மதிப்பிட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே பருவத்தில் உற்பத்தியான 20.3 மில்லியன் டன் அளவை விட 29 சதவிகிதம் அதிகமாகும். அதாவது உள்நாட்டு நுகர்வு அளவை விட 2 மில்லியன் டன் கூடுதலான அளவில் இந்த ஆண்டில் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon