மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 6,754 மற்றும் புதுச்சேரியில் 147 என மொத்தம் 6,901 பள்ளிகளைச் சேர்ந்த, 4.63 லட்சம் மாணவர்கள், 40,689 தனித் தேர்வர்கள் உட்பட 9,07,620 பேர் தேர்வெழுதி வருகின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல் அடங்கிய பாட பிரிவில் 4.28 லட்சம் பேரும், உயிரியல் பாட பிரிவில் 2.97 லட்சம் பேரும், வணிகவியலில் 2.42 லட்சம் பேரும், தொழிற்கல்வியில், 62,000 பேரும், வரலாறு பிரிவில் 14,000 பேரும் தேர்வெழுதவுள்ளனர். தேர்வுக்காகத் தமிழகத்தில் 2,756, புதுச்சேரியில் 38 என மொத்தம் 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு, 278 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 50,584 பேர் தேர்வெழுதுகின்றனர்.

இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 70 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற இருப்பதாகவும், 50 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

செவ்வாய், 6 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon